டீசல் பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் !!

சென்னை 21 மே 2022 டீசல் பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் !!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.9.50 டீசல் விலை லிட்டருக்கு ரூபாய்.7.00 குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது.

பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts