திமுக எம்.பி மகன் பாஜகவில் இணைந்த விவகாரம் குறித்து திமுக  பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி பதில்.

சென்னை 09 மே 2022 திமுக எம்.பி மகன் பாஜகவில் இணைந்த விவகாரம் குறித்து திமுக  பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி பதில்.

பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா.

இவருடைய மகன் சூர்யா நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்த சூரியா, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

குறித்து திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதிலில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது சாதாரண நிகழ்வு தான் என்று திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி கூறினார்.

Related Posts