ஐன்ஸ்டீனை தூக்கி சாப்பிட்ட 10 வயது இந்திய பிரிட்டிஷ் சிறுவன்.. உலகின் 99% மக்களை விட புத்திசாலியாம்!

ஐன்ஸ்டீனை தூக்கி சாப்பிட்ட 10 வயது இந்திய பிரிட்டிஷ் சிறுவன்.. உலகின் 99% மக்களை விட புத்திசாலியாம்!

சென்னை 02 டிசம்பர் 2024 லண்டன் 10 வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் ஜாலியாக தான் இருப்பார்கள். ஆனால், பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயது இந்தியப் பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோராவின் அறிவாற்றலை பார்த்து ஒட்டுமொத்த பிரிட்டனும் வியந்து நிற்கிறது.

பொதுவாக ஒருவரது அறிவுத்திறன் ஐ.க்யூ எனப்படும் intelligence quotient மூலமாகவே அளவிடப்படும். இந்த கிரிஷ் அரோராவுக்கு சமீபத்தில் ஐக்யூ சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ மார்க்: அதில் அவர் உலகின் தலைசிறந்த அறிஞர்களாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை தூக்கிச் சாப்பிடும் வகையில் 162 ஐக்யூ மார்க் பெற்று உலகையே திகைக்க வைத்துள்ளார்.

இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் டாப் 1%ல் கிரிஷ் அரோரா இடம்பிடித்துள்ளார். இவ்வளவு ஐக்யூ மார்க் பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார்.

இது தொடர்பாக கிரிஷ் கூறுகையில், “அதில் இருந்த 11-க்கும் மேற்பட்ட தேர்வுகள் மிகவும் எளிதாக இருந்தன. புதிய பள்ளியில் சேர்வது ஆர்வமாகவே இருக்கிறது.

அங்கு எனக்கு ஏற்ப பாடங்கள் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

Read Also  வாழும் சூழலுடன் நம்முடைய பால்வழி திரளில் மட்டும் 30 கோடி கோள்கள் இருக்கலாம் நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம் !!

ஏனென்றால் எனக்கு ஆரம்பப் பள்ளி சலிப்பாக இருக்கிறது. அங்கு நான் எதையும் புதிதாக கற்கவில்லை. நாள் முழுக்க எளிமையான கணக்கு அல்லது சும்மா ஒரு பாரா மட்டும் எழுதச் சொல்கிறார்கள்.

அது போர் அடிக்கிறது. எனக்கு அல்ஜீப்ராவில் தான் அதிக விருப்பம். புதிய பள்ளியில் அதைச் செய்ய முடியும் என நம்புகிறேன்” என்கிறார் அதே உற்சாகத்துடன்..!

Related Posts