பாரதிய ஜனதா கட்சிக்கு ரூபாய். 2 ஆயிரம் நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி.!!

பாரதிய ஜனதா கட்சிக்கு ரூபாய். 2 ஆயிரம் நன்கொடை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!!

சென்னை 04 மார்ச் 2024 ‘பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என, ரூபாய் .2 ஆயிரம் நன்கொடை வழங்கிய படத்தை பகிர்ந்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விறுவிறுப்பாக அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தேர்தல் தேதி விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க கட்சிக்கு ரூ.2 ஆயிரம் பிரதமர் மோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

இது தொடர்பான தகவலை அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Posts